தமிழகத்தை உலுக்கிய VAO கொலை வழக்கு - வெளியான அதிரடி உத்தரவு

கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், 3 காவலர்கள் நீலகிரி மாவட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்டனர். தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராமத்தில் விஏஓவாக பணியாற்றிய லூர்து பிரான்சிஸ், மணல் கடத்தல் விவகாரம் தொடர்பாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மணல் கொள்ளையர்களுடன் தொடர்புடையதாக கூறப்பட்ட தலைமை காவலர் சரவணன், தனிப்பிரிவு போலீசார் மகாலிங்கம் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் சுரேஷ் ஆகியோர் நீலகிரி மாவட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com