வன்னியர் சங்க பிரமுகர் ஓட ஓட வெட்டி கொலை - பாமகவினர் சாலைமறியல் போராட்டம்

x

மயிலாடுதுறை கொத்தத்தெருவை சேர்ந்த கண்ணன் என்பவர், முன்னாள் வன்னியர் சங்க நகர செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார். இருவர் கலைஞர் காலனியை சேர்ந்த மின்வாரிய ஊழியர் கதிரவன் என்பவரை தாக்கிய வழக்கில் சிறை சென்று வந்துள்ளார். கண்ணன் மீது பல்வேறு அடிதடி வழக்குகள் இருந்த நிலையில், குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறை சென்று கடந்த15 நாள்களுக்கு முன்பு விடுதலை ஆகி ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில், நேற்று இரவு நண்பர்களுடன் வெளியே சென்ற கண்ணனை, கதிரவன், அஜித், திவாகர் அடங்கிய கும்பல் ஓட ஓட வெட்டி படுகொலை செய்தது. சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து வழக்குப் பதிந்த போலீசார்,கதிரவன் உள்ளிட்ட 20 பேரை தேடிவந்தனர். இந்நிலையில், கதிரவன், உள்ளிட்ட 12 பேரை கைது செய்தனர். இதனிடையே இதில் தொடர்புடைய மற்றவர்களையும் கைது செய்ய வலியுறுத்தி, பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்