அசுர வேகத்தில் பாய்ந்த வந்தே பாரத் ரயில்.. இப்போ அப்படியே தலைகீழாக மாறியது

x

2019 பிப்ரவரியில் இந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயில் சேவை டெல்லியில் இருந்து வாரணாசி வரை தொடங்கப் பட்டது.

மணிக்கு160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்ட வந்தே பாரத் ரயில்களில் தனிப்பட்ட எஞ்சின் கிடையாது.

புறநகர் மின்சார ரயில்கள் போல, பெட்டி ஒன்றுக்கு ஒரு மின்சார மோட்டாரை கொண்டு இயக்கப்படுகிறது.

தற்போது 5 வழிதடங்களில், வந்தே பாரத் ரயில்கள் வாரத்தில் ஆறு நாட்கள் இயக்கப்படுகின்றன.

மணிக்கு160 கிலோ மீட்டர் வேகம் செல்லும் திறன் இருந் தாலும், அவற்றின் சராசரி வேகம் தற்போது மணிக்கு 83 கிலோ மீட்டராக குறைக்கப்பட்டுள்ளது.

புது டெல்லி, வாரணாசி வந்தே பாரத் ரயிலின் சராசரி வேகம் மணிக்கு 95 கிலோமீட்டராக குறைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் கூறியுள்ளது.

மும்பை, காந்தி நகர் வந்தே பாரத் ரயிலின் சராசரி வேகம் மணிக்கு 84 கிலோ மீட்டராக குறைக்கப்பட்டுள்ளது.

புது டெல்லி, ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி வந்தே பாரத் ரயிலின் சராசரி வேகம் மணிக்கு 82 கிலோ மீட்டராக குறைக்கப்பட்டுள்ளது.

புது டெல்லி, அம்ப் அண்டவ்ரா வந்தே பாரத் ரயிலின் சராசரி வேகம் மணிக்கு 79 கிலோ மீட்டராக குறைக்கப்பட்டுள்ளது.

சென்னை, மைசூரு வந்தே பாரத் ரயிலின் சராசரி வேகம் மணிக்கு 77.5 கிலோ மீட்டராக குறைக்கப்பட்டுள்ளது.

கால்நடைகள் ரயில் பாதையை கடப்பதால் ஏற்படும் ஆபத்துகளை குறைப்பதற்காக வந்தே பாரத் ரயில்களின் சாராசரி வேகம் குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதர ரயில்கள் போல வந்தே பாரத் ரயில்களின் முதல் பெட்டியாக ரயில் எஞ்சின் இல்லாததால், விபத்து நடந்தால், பெரும் உயிர் சேதம் ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது.

இரும்புப் பாதைகளின் தரம், உள்கட்டுமான வசதிகளின் போதாமை ஆகிய காரணங்களினாலும் ரயில்களின் வேகம் குறைக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்