வந்தே பாரத் ரயிலுக்குள் சிக்கி கொண்ட எம்எல்ஏக்கள் - திருப்பத்தூரில் பரபரப்பு

x

ஆம்பூர் ரயில் நிலையத்தில் ஜோலார்பேட்டை எம்எல்ஏ தேவராஜ் , ஆம்பூர் எம்எல்ஏ வில்வநாதன் திமுக மற்றும் பாஜக நிர்வாகிகள், வந்தே பாரத் ரயிலுக்கு உற்சாக வரவேற்பு அளித்ததுடன், அடுத்த ரயில் நிலையத்தில் இறங்க திட்டமிட்டு ரயிலில் பயணித்தனர். ஆனால், ரயிலில் கதவுகள் அடுத்தடுத்த ரயில் நிலையங்களில் திறக்கப்படாத நிலையில், உள்ளேயே சிக்கி தவித்துள்ளனர். பின்னர், இரண்டு ரயில் நிலையங்களை தாண்டி மேல்பட்டி ரயில் நிலையத்தில் இறங்கி அனைவரும், பேருந்துகள் மூலம் சொந்த ஊர்களுக்கு திரும்பி உள்ளனர். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்