திடீரென விழுந்த அங்கன்வாடி மேற்கூரை... அலறியடித்து ஓடிய குழந்தைகள் - 1 குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்

• திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே, அங்கன்வாடி மைய கட்டிட மேற்கூரையில் சிமெண்ட் பூச்சுகள் கீழே விழுந்ததால் அங்கன்வாடி குழந்தைகள் அச்சமடைந்தனர். • மருதாடு கிராமத்தில் இயங்கும் அங்கன்வாடி மையத்தில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். • இந்நிலையில், மேற்கூரையில் சிமெண்ட் பூச்சுகள் திடீரென கீழே விழுந்தன. • இதனால் குழந்தைகள் அலறியடித்து ஓடினர். • இதில் ஒரு குழந்தைக்கு லேசான காயம் ஏற்பட்டது. • இதையடுத்து, பெற்றோர் தங்கள் குழந்தைகளை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com