திமுக நிர்வாகிகளில் தங்கள் பிள்ளைகளை தமிழ் வழியில் படிக்க வைத்துள்ளார்களா? - வானதி சீனிவாசன்

x

திமுகவினர் நடத்தும் சிபிஎஸ்இ பள்ளிகள் விவரத்தையும், தமிழ் வழியில் படிக்கும் திமுக நிர்வாகிகள் பிள்ளைகளின் பட்டியலையும் வெளியிடுமாறும் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழி நாடாளுமன்ற குழு, குடியரசுத் தலைவரிடம் அளித்த பரிந்துரைகளை, இந்தி திணிப்பு என திரித்து, திமுக அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாக கூறியுள்ளார். இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அந்தந்த மாநில மொழிகளிலேயே பள்ளிக் கல்வி முதல் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர் கல்வி இருக்க வேண்டும் என்பதே பாஜகவின் கொள்கை என்றும் அவர் கூறியுள்ளார். இந்தியை எதிர்க்கும் திமுக நிர்வாகிகளில் யாராவது தங்கள் பிள்ளைகளை தமிழ் வழியில் படிக்க வைத்துள்ளார்களா? என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், தமிழகத்தில் திமுகவினர் நடத்தும் எத்தனை சிபிஎஸ்இ பள்ளிகளில் இந்தி பாடம் உள்ளது? என்பதை திமுக தலைமை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்