'வணக்கம்சென்னை' - தமிழில் ட்வீட் போட்ட பிரதமர் மோடி

தமிழக வருகை குறித்து பிரதமர் மோடி, தமிழில் ட்வீட் செய்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

சென்னையில், இன்று நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார். இதுகுறித்து தமது விட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட்டு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அதில், விமான நிலையத்தின் புதிய முனைய கட்டடம் திறந்து வைக்கப்பட உள்ளதாகவும், சென்னை - கோயம்பத்தூர் இடையிலான வந்தே ரயில் சேவையை தொடங்கி வைக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் 125 வது ஆண்டு நிறுவன விழாவிலும் கலந்துகொள்ள உள்ளதாக பிரதமர் மோடி தமது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 

X

Thanthi TV
www.thanthitv.com