மணமகனை அழைக்க சென்ற 'வேன் '.. தீப்பிடித்து மளமளவென எரிந்த சோகம் - அதிர்ச்சியில் திருமண வீட்டார்...

மணமகனை அழைக்க சென்ற 'வேன் '.. தீப்பிடித்து மளமளவென எரிந்த சோகம் - அதிர்ச்சியில் திருமண வீட்டார்...
Published on

கேரள மாநிலம் திருச்சூர் அருகே திருமண சவாரிக்குச் சென்றவன் திடீரென தீப்பிடித்த சம்பவத்தால் பரபரப்பு கேரள மாநிலம் திருச்சூர் அருகே சேலக்கரை பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்காக மணமகன் வீட்டிலிருந்து திருமண மண்டபத்திற்கு செல்வதற்கான நபர்களை அழைத்துச் செல்ல லிதின் என்பவருக்கு சொந்தமான வாடகை வேன் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென அதன் எந்திரத்தில் இருந்து புகை எழுந்தது. அதைத்தொடர்ந்து தீப்பிடித்த நிலையில் ஓட்டுநர் வேனை நிறுத்திவிட்டு விரைந்து வெளியேறினார். சில நொடிகளில் தீ மளமளவென தீப்பிடித்தது. உடனடியாக அப்பகுதியில் நின்று கொண்டிருந்தவர்கள் தீயணைப்பு த்றையினரை வரவழைத்து விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர். இருப்பினும் வேனின் பெரும்பகுதி தீக்கி இரையானது. திருமண நிகழ்ச்சிக்காக சவாரி சென்ற வேன் தீப்பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

X

Thanthi TV
www.thanthitv.com