சிறுவன் மீது ஏறி இறங்கிய வேன்.. - வீடு திரும்புவதற்குள் பறிபோன உயிர்

x

ஓசூர் அருகே, இருசக்கர வாகனம் மீது பிக்கப் வேன் மோதிய விபத்தில், 8ம் வகுப்பு மாணவர் உயிரிழந்தார். சாவரபத்தம் கிராமத்தைச் சேர்ந்த பரமேஷ் என்ற இளைஞரும், உறவினர் சிறுவன் பவனும் இருசக்கர வாகனத்தில், மருத்துவமனைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். கொல்லப்பள்ளி அருகே வந்தபோது, பின்னால் வந்த பிக்கப் வேன் மோதியதில், இருவரும் நிலைதடுமாறி விழுந்தனர். இதில், வேன் சக்கரத்தில் சிக்கிய பவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்