இந்திய போர் விமானத்தை இயக்கும் முதல் இஸ்லாமிய பெண்...சாதனை படைத்த டிவி மெக்கானிக்கின் மகள்

x

உத்தரபிரத்தேசத்தில் தொலைக்காட்சி பழுது பார்க்கும் தொழிலாளியின் மகள், விமானப்படையின் போர் விமானத்தை இயக்கும் முதல் இஸ்லாமிய பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார். மிர்சாபூரை சேர்ந்த சானியா மிர்சா, இந்திய விமானப்படையின் போர் விமானத்தை இயக்கும் தேர்வில் வெற்றிப்பெற்றுள்ளார். இதன் மூலம் இந்திய விமானப்படையின் போர்விமானத்தை இயக்கும் முதல் இஸ்லாமிய பெண் என்ற பெருமையை சானியா மிர்சா பெற்றுள்ளார். இந்திய பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள 400 பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. அதில், போர் விமானத்தை இயக்கும் 2 பணியிடங்கள் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டன. இந்த நிலையில் தனக்கான இடத்தை பிடித்து விட்டதாக மகிழ்ச்சியுடன் சானியா மிர்சா கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்