சாப்பிட தனி தட்டு கொண்டு வராததால் பிரம்பால் மாணவனை அடித்த ஆசிரியை..தேம்பி அழும் சிறுவன் - அதிர்ச்சி வீடியோ

x

சாப்பிட தனி தட்டு கொண்டு வராததால் பிரம்பால் மாணவனை அடித்த ஆசிரியை..தேம்பி அழும் சிறுவன் - அதிர்ச்சி வீடியோ

தனியாக தட்டு எடுத்து வராத தலித் சிறுவனை ஆசிரியை சரமாரியாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரப்பிரதேசம், கான்பூர் பானி கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் தலித் சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் சாப்பிடுவதற்கு, வீட்டில் இருந்து தட்டு எடுத்து வர வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், அங்கு 2 ஆம் வகுப்பு படிக்கும் 6 வயது சிறுவன் தட்டு எடுத்துச் செல்லவில்லை. எனவே, ஆசிரியை ஒருவர் அந்த சிறுவனை, பிரம்பால் அடித்து இழுத்துச் சென்று, பள்ளியில் இருந்து வெளியே தள்ளியுள்ளார். அவ்வழியாக சென்ற பெண் ஒருவர் அதனை வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்