சாலையோர கடையில் மண் பானைகளை தாறுமாறாக அடித்து உடைத்த பெண் - பரபரப்பு காட்சி

x

உத்தரபிரதேசத்தில் வியாபாரிகளுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஆத்திரமடைந்து மரக்கட்டையால் மட்பாண்டங்களை உடைத்த பெண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. லக்னோவின் கோமதி நகரில் உள்ள தெருவோர கடைகளில் பெண் ஒருவர் பொருள் வாங்க சென்றுள்ளார். அந்த பெண்ணிற்கும், வியாபாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் மரக்கட்டையை எடுத்து வந்து, சாலையில் அடுக்கி வைத்திருந்த மட்பாண்டங்களை அடித்து நொறுக்கினார். இதையடுத்து, அந்த பெண் மீது இருப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்