"இறந்தவர்களின் உடல்கள் இல்லாமல் திரும்பிய அமெரிக்க வீரர்கள்... 20 ஆண்டுகளில் இதுவே முதல்முறை"

x

கடந்த 20 ஆண்டுகளில் முதல்முறையாக ஆப்கானிஸ்தானில் இருந்து இறந்தவர்களின் உடல்கள் இல்லாமல், வீரர்கள் நாடு திரும்பியதாக அமெரிக்க செயலாளர் ஆண்டனி ஜே பிளிங்டன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், ஆப்கானிஸ்தான் பெண்களின் எதிர்காலத்தை இருளாக்குவதாக விமர்சித்தார். ஆப்கானிஸ்தானில் நீடித்து வந்த நீண்ட போர் முடிவுக்கு வந்ததாகவும், 20 ஆண்டுகளில் முதல் முறையாக இறந்த உடல்கள் இன்றி அமெரிக்க வீரர்கள் நாடு திரும்பியதாகவும் கூறினார். மேலும், தாலிபான் பிடியில் இருக்கும் ஆப்கானிஸ்தானில் இருந்து ஒரு கோடியே, 20 லட்சம் மக்களை வெளியேற்றியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்