சென்னை துறைமுகத்தில் அமெரிக்க காவல்படை கப்பல்..! - சென்னை வந்த நோக்கம் என்ன?

x

4 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க கடலோர காவல்படை கப்பல் மிட்ஜெட், நேற்று சென்னை துறைமுகத்திற்கு வந்தடைந்தது.

குவாட் நாடுகள் மீதான சிறப்பு கவனத்துடன் இந்தோ பசிபிக் பகுதியை வலுப்படுத்துதல், இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள கடல்சார் எல்லைகளை கண்காணித்து பாதுகாப்பதற்கு ஆதரவளித்தல் ஆகிய காரணங்களுக்காக அமெரிக்க கடலோர காவல்படை கப்பல் மிட்ஜெட் நேற்று சென்னை துறைமுகம் வந்தடைந்தது.

418 அடி நீளமுள்ள யுஎஸ்சிஜிசி மிட்ஜெட், அமெரிக்க மற்றும் இந்திய கடலோர காவல்படைகள் இடையேயான உறவை வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் மற்றும் இந்திய‌ கடலோர காவல்படையினருடனான‌ சந்திப்புகள் மற்றும் பயிற்சிகளை தொடர்ந்து மாலத்தீவுக்கும் மிட்ஜெட் செல்லவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்