"சனாதன தர்மத்தில் தீண்டாமைக்கு இடமில்லை" ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரா மடத்தின் பொன்விழா கொண்டாட்டம் மற்றும் புதிய கட்டடத்தின் திறப்பு விழாவில், சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், சனாதனத்தால் உருவான நாடு பாரதம் என்றும், சிலர் அறியாமையின் காரணமாக சனாதனத்தில் தீண்டாமை உள்ளதாக தவறாக பிரசாரம் செய்கின்றனர் என்றும் கூறினார். அனைவரும் சமம் என்பதை சனாதனம் வலியுறுத்துவதாகக் கூறிய அவர், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதே சனாதனத்தின் அடிப்படைதான் என்றார். நாடு முழுவதும் சனாதனம் நிலைபெற்று இருப்பதாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com