அடுத்தடுத்து அதிர்வலையை கிளப்பும் தீண்டாமை.. விழுப்புரத்தை தொடர்ந்து கரூரிலும்..கோவிலுக்கு பூட்டு போட்ட சம்பவம்..

x

விழுப்புரத்தை தொடர்ந்து, கரூர் மாவட்டத்திலும் பட்டியலின மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் கோவிலுக்கு பூட்டு போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . அங்கு என்ன நடந்தது என்பதை விவரிக்கிறது இந்த தொகுப்பு...

சமூக நீதியின் சாளரம் என பெருமை பீத்திக்கொள்ளும் தமிழகத்தில் அடுத்தடுத்து நடந்த ஆலய பிரவேச மறுப்பு சம்பவங்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கோயிலுக்குள் சென்று வழிபாடு நடத்திய, பட்டியலின மக்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோயிலுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இந்த சர்ச்சை அடங்குவதற்குள் இதே போல் கரூர் மாவட்டத்தில் பட்டியலின மக்களுக்கு வழிபாட்டு அனுமதி மறுக்கப்பட்ட காளியம்மன் கோவிலுக்குபூட்டுபோடப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் கடவூர் அருகே வீரணம்பட்டியில் காளியம்மன் கோவிலில்,வைகாசி திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது. சுற்றியுள்ள 8 ஊர் கிராமங்களுக்கு இந்த கோயில் பொதுவானது என்பதால், கோயில் திருவிழா பிரமாண்டமாக கொண்டாடப்படும்...

கோயில் அமைந்திருக்கும் வீரணம்பட்டி கிராமத்தில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த 80 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அதே போல மாற்று சமூகத்தை சேர்ந்த 200 குடும்பங்கள் அங்கே வசித்து வருகின்றது.

இந்நிலையில், பட்டியலினத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்ய முயற்சி செய்ததாகவும், மாற்றுச்சமூகத்தை சேர்ந்தவர்கள் அவரை தடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து இருதரப்புக்கும் இடையே பிரச்னை முற்றிய நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியர் இருதரப்பினரிடையே பேச்சு வார்த்தை நடத்தினார்.

அப்போது மாற்று சமூகத்தை சேர்ந்தவர்கள், பட்டியலின மக்களை கோயிலுக்கு அனுமதிக்க மாட்டோம் எனக் கூறியுள்ளனர்.கோயிலுக்குள் செல்வது எங்கள் உரிமை என கூறிய பட்டியலின மக்களம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாத்தால், காளியம்மன் கோயிலுக்கு, தற்காலிகமாக பூட்டு ட்டுள்ளனர் அதிகாரிகள்.

ஏற்கனவே சேலம் மாவட்டத்தில் கோயிலுக்குள் சென்றுவந்த பட்டியலின இளைஞரை ஆபாசமாக திட்டிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது...

அதே போல், வேங்கைவயல் கிராமத்தில், குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவமும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், விழுப்புரம் மற்றும் கரூர் மாவட்டத்தில் பட்டியலின மக்கள் ஆலய பிரவேசத்திற்கு மறுக்கப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்