அமெரிக்காவை புரட்டிப் போட்ட சூறாவளி..வெள்ளத்தில் மூழ்கிய நகரங்கள்.

x

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் இயன் சூறாவளியால் கனமழை கொட்டித் தீர்த்த நிலையில், வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

வரலாற்றில் அமெரிக்காவைப் புரட்டிப் போட்ட சூறாவளிகளில் ஒன்றாகக் கருதப்படும் இயானால் மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியதில், ஃப்ளோரிடா மாகாணம் கடும் பாதிப்புகளை சந்தித்துள்ளது.

வளைகுடா பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. லட்சக்கணக்கான மக்கள் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர்.

உயிர் சேதங்கள் குறித்த ஊர்ஜிதப்படுத்தப்பட்ட தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. வெப்ப மண்டல புயலாக இயான் வலுவிழந்த நிலையில், புயல் மீட்புப் பணிகளில் பல்லாயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் களம் இறக்கப் பட்டுள்ளனர்.

லீ கவுண்டி, விர்ஜினியா, ஜார்ஜியா, மாகாணங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

பல விமான நிலையங்கள் மூடப்பட்டு 4 ஆயிரம் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்