மாலத்தீவிற்கு நேரடி சரக்கு கப்பல் சேவை தொடங்கி வைத்த மத்திய இணை அமைச்சர்

x

தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு நேரடியாக சரக்குகளை ஏற்றி செல்வதற்கான MSS GALENA என்ற சரக்கு கப்பல் சேவையினை மத்திய கப்பல்துறை இணை அமைச்சர் சாந்தனு தாக்கூர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த சரக்கு கப்பல் 421-கண்டெய்னர் பெட்டகங்களை ஏற்றிசெல்லும் என்றும், மாதத்தில் மூன்று முறை தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவிற்கு சரக்குகளை ஏற்றி செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கப்பல் சேவை இந்தியா - மாலத்தீவு இடையேயான உறவை மேலும் மேம்படுத்தும் என்று மத்திய கப்பல்துறை இணை அமைச்சர் சாந்தனு தாக்கூர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்