கேன்ஸ் திரைப்படச் சந்தையின் இந்திய அரங்கை திறந்து வைத்தார் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்

x

கேன்ஸ் திரைப்படச் சந்தையின் இந்திய அரங்கை மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பிரான்ஸ் நாட்டுக்கான இந்திய தூதர் திரு ஜாவேத் அஷ்ரஃப், தகவல் ஒலிபரப்பு அமைச்சக இணைச் செயலாளர் திரு பிரித்துல் குமார் மற்றும் இந்திய திரைப்படத் தொழில்துறையினர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் வருகிற நவம்பர் மாதம் கோவாவில் நடைபெற உள்ள 54 ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழாவுக்கான சுவரொட்டிகள் மற்றும் முன்னோட்டத் திரைப்படங்களும் வெளியிடப்பட்டன.நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் முருகன், 50 மொழிகளில் 3,000 க்கும் அதிகமான திரைப்படங்களுடன் உலகிலேயே அதிக எண்ணிக்கையில் திரைப்படங்கள் தயாரிக்கும் நாடாக இந்தியா விளங்குகிறது என்றார்.


Next Story

மேலும் செய்திகள்