"தேர்தல் முடிந்ததும் காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து" மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி

x

ஏன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த அவர், திரிபுரா மட்டுமல்லாமல், அடுத்து நடைபெற உள்ள கர்நாடகா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேச மாநிலங்களிலும் பாஜக ஆட்சியை கைப்பற்றும் என்றார். காஷ்மீரில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பின்னர் மாநில அந்தஸ்து மீண்டும் வழங்கப்படும் என்று அவர் கூறினார். அங்கு, வாக்காளர் பட்டியல் தயாரிப்பதற்கான பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்துள்ளதாகவும், தேர்தல் நடத்துவது குறித்த முடிவை தேர்தல் ஆணையம்தான் எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். பாராளுமன்றம் முதல் பஞ்சாயத்துகள் வரை அனைத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து பிரதமர் மோடி பேசியிருப்பதாகவும், அதற்கான நேரம் தற்போது வந்திருப்பதாகவும் அமித்ஷா கூறினார். மக்களவையில், இதுவரை பிரதான எதிர்க்கட்சி என்கிற அந்த‌ஸ்தை, யாருக்கும் மக்கள் வழங்கவில்லை என்ற அவர், 2024 பொதுத் தேர்தலில் முதன்மையான எதிர்க்கட்சி யார் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்