எளிமையிலும் எளிமையாய் நடந்து முடிந்த மத்திய நிதியமைச்சரின் மகள் திருமணம்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் மகள் வாங்மயிக்கு கர்நாடக மாநிலம் பெங்களூருவில் திருமணம் நடந்தது. தனியார் ஹோட்டலில் எளியமுறையில் நடந்த திருமணத்திற்கு நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. உடுப்பி அதமாரு மடத்தை சேர்ந்த விஸ்வபிரிய தீர்த்த சுவாமிகள் மற்றும் ஈசபிரிய தீர்த்த சுவாமிகள் மணமக்களை வாழ்த்தி, கிருஷ்ணர் கோவில் பிரசாதம் வழங்கி ஆசீர்வாதம் செய்தனர். மத்திய நிதியமைச்சர் மகளின் திருமணம் எளிய முறையில் நடைபெற்றது கவனம் ஈர்த்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com