பிரியாணியில் கிடந்த பூரான் - சமையலறையில் எலிகள் ஜாலி - வாடிக்கையாளர், அதிகாரிகள் ஷாக்...

x

பிரியாணியில் கிடந்த பூரான் - சமையலறையில் எலிகள் ஜாலி - வாடிக்கையாளர், அதிகாரிகள் ஷாக்...

கேரளாவில் பிரியாணியில் பூரான் ஒன்று கிடந்த நிலையில் சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே மட்டஞ்சேரியில் உள்ள உணவகத்திற்கு சாப்பிட சென்ற வாடிக்கையாளர், பிரியாணியை ஆர்டர் செய்துள்ளார். அப்போது அதில் பெரிய சைஸ் பூரான் ஒன்று கிடக்கவே பதறிப்போன வாடிக்கையாளர் இதுகுறித்து புகார் அளித்தார். இதன்பேரில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஓட்டலுக்கு சோதனை நடத்த வந்தனர். அப்போது சமையலறையின் உள்ளே எலிகள் அங்கும் இங்கும் ஓடியதை பார்த்து கோபமடைந்த அதிகாரிகள் உணவகத்திற்கு சீல் வைத்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பாக செவிலியர் ஒருவர் பிரியாணியும் சிக்கனும் சாப்பிட்டு உயிரிழந்த நிலையில் மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்