கண்டுகொள்ளாத சாலை பணி...கொதித்தெழுந்த கிராம மக்கள் - களத்தில் இறங்கிய வீர பெண்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மாத்தூர் அருகே பெண்களே களத்தில் இறங்கி பாதை அமைத்தனர். இந்தப் பகுதியில் சாலை பயன்பாட்டிற்காக மூன்று முறை சாலை அமைக்க ஜல்லிக்கற்கள் கொட்டி மண் பரப்பிய நிலையில் பணிகள், கிடப்பில் போடப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த நரால் சந்தம்பட்டி கிராமத்தை சேர்ந்த 100 - க்கும் மேற்பட்ட பெண்கள் மண்வெட்டி கடப்பாரை உள்ளிட்ட உபகரணங்கள் கொண்டு சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com