கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் அஷ்ரப் தாமரச்சேரி. சமூக ஆர்வலரான இவர், ஷார்ஜாவில் இருந்து கோழிக்கோட்டிற்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவன விமானத்தில் பயணம் செய்துள்ளார். பயணத்தின்போது இந்திய மதிப்பில் 337 ரூபாய் கொடுத்து வெஜிடபிள் பிரியாணியை அவர் ஆர்டர் செய்துள்ளார். அப்போது பிளாஸ்டிக் டப்பாவில் அடைக்கப்பட்ட உணவை திறந்து பார்த்த அவர், வேகாமல் தண்ணீராக இருந்த பிரியாணியை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பான வீடியோவை அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட நிலையில் வைரலானது. இதனைத் தொடர்ந்து மன்னிப்பு கோரிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம், உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளது.