"தாங்காத பாரம்.." - நடுரோட்டிலேயே உடைந்து பழுதாகி நின்ற லாரி | coimbatore | thanthi tv

x

கோவை மாவட்டம் சூலூர், சிந்தாமணி புதூர் பகுதியில், பாரம் தாங்காமல் நடுரோட்டிலேயே லாரி உடைந்து பழுதாகி நின்றது. கோவை - கொச்சின் பைபாஸ் சாலையில், அதிக எடை கொண்ட இரும்பு உதிரி பாகங்களை ஏற்றி கொண்டு, பெங்களூரை நோக்கி கனரக லாரி ஒன்று சென்றது. இந்த லாரி சிக்னலின் இடது புறமாக செல்ல முற்பட்டபோது, பாரம் தாங்காமல் நடுரோட்டிலேயே உடைந்து நின்றது. அதிர்ஷ்டவசமாக அப்போது அங்கு எந்த வாகனங்களும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து காரணமாக சுமார் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்