"இன்னும் 20 ஆண்டுகள் தான்.." உலக மக்களுக்கு பெரும் ஆறுதல்... ஒருவழியாக ஐ.நா. சொன்ன பெரும் நற்செய்தி...

x

"இன்னும் 20 ஆண்டுகள் தான்.." உலக மக்களுக்கு பெரும் ஆறுதல்... ஒருவழியாக ஐ.நா. சொன்ன பெரும் நற்செய்தி...


காற்று மண்டலத்தின் மேற்பரப்பில் உள்ளா ஓசோன் படலத்தில் உருவாகியுள்ள ஓட்டை, அடுத்த 20 ஆண்டுகளில் சீரடைந்து விடும் என்று ஐ.நாவின் ஆய்வறிக்கை கூறியுள்ளது.

சூரியனில் இருந்து வெளிப்படும் புற ஊதாக கதிர்களினால் மனிதர்களுக்கு பெரும் தீங்கு ஏற்படாமல், அவற்றை ஓசோன் படலம் உள்வாங்கிக் கொள்கிறது. ஆனால் 1970கள் முதல், ஏசிகள், பிரிஜ்களில் பயன்படுத்தப்படும் குளொரோ புளுரோ கார்பன் வாயுகளின் வெளிபாட்டினால், ஓசோனா படலத்திற்கு சேதம் ஏற்பட்டு, ஓட்டைகள் ஏற்படத் தொடங்கியது. இதை தடுக்க, 1987இல், 46 நாடுகள் சி.எப்.சி பயன்பாட்டை தடை செய்யும் மான்ட்ரியல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. பின்னர் அனைத்து உலக நாடுகளும் இதில் பங்கெடுத்த பின், 2000ஆம் ஆண்டு முதல் ஓசோன் படலத்தில் ஏற்பட்ட ஓட்டை அடைபடத் தொடங்கியது. 2066இல் அன்டார்டிக்கா மீது உள்ள ஓசோன் பகுதியில் உள்ள ஓட்டை அடைபடும் என்றும், 2045இல் ஆர்டிக் பகுதியில் அடைபடும் என்றும் ஐ.நா வெளியிட்ட அறிக்கை கூறியுள்ளது. இதர பகுதிகளில் அடுத்த 20 ஆண்டுகளில் ஓசோன் ஓட்டை அடைபடும் என்று கூறியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்