உக்ரைனின் அடுத்த நகர்வு - ரஷ்யாவுக்கு அச்சுறுத்தலா..?

x

உக்ரைன் விமானிகளுக்கு F-16 ரக விமான பயிற்சி விரைவில் அளிக்கப்படும் என நெதர்லாந்து பாதுகாப்பு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், இந்தப் பயிற்சியை பெல்ஜியம், டென்மார்க் உள்ளிட்ட நாடுகளுடன் ஒருங்கிணைத்து அளிக்க இருப்பதாகவும், மற்ற நாடுகளும் இதில் பங்குகொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார். முன்னதாக, கடந்த வெள்ளியன்று உக்ரைன் விமானிகளுக்கான F-16 ரக விமான பயிற்சிக்கு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் அளித்தார். எனினும், F-16 ரக விமானங்கள் கொண்டு ரஷ்ய பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட மாட்டாது என, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உறுதியளித்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்