"பேச்சு பேச்சாதான் இருக்கும்".. "விட்டெல்லாம் கொடுக்க முடியாது"... உக்ரைன் மீதான படையெடுப்பு - ரஷ்யா அதிரடி

x

உக்ரைன் மீதான ரஷ்ய போர் ஓராண்டுக்கும் மேலாகத் தொடர்ந்து வருகிறது...

பல கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்துள்ள நிலையில், ரஷ்யா ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி, போர் விவகாரம் குறித்து உக்ரைனுடன் தாங்கள் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் எனவும், ஆனால், ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைனிய பகுதிகளைத் தவிர்க்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது...

டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க், கெர்சன் மற்றும் ஜப்போரிஜியா ஆகிய பிராந்தியங்களைக் கைப்பற்றிய ரஷ்யா, மேற்கண்ட 4 மாகாணங்களிலும் வாக்கெடுப்பு நடத்தி அவற்றை ரஷ்யாவுடன் இணைத்துக் கொண்டது.

ஆனால் இது முறையற்றது என மேற்கு நாடுகள் குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்