இந்திய கடவுள் மகா காளியை இழிவுப்படுத்திய உக்ரைன்?

x

உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் மகா காளியை இழிவுபடுத்தும் விதமாக புகைப்படம் வெளியிடப்பட்ட சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்ய கட்டுப்பாட்டு கிரிமியாவின் மிக முக்கிய துறைமுக நகரமான செவஸ்டோபோலில் உள்ள எண்ணெய்க் கிடங்கில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், கிடங்கு தீப்பிடித்து எரிந்து விண்ணை முட்ட புகை மேலெழுந்தது. இத்தாக்குதலை உக்ரைன் படைகள் தான் நடத்தி இருக்கக் கூடும் என குற்றம் சாட்டப்பட்ட நிலையில், தாக்குதலால் புகை மேலெழும்பிய புகைப்படத்தை வைத்து மகா காளியின் உருவத்தை மர்லின் மன்றோவைப் போல் மாற்றம் செய்து உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் பதிவிட்டது தான் தற்போது பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இப்பதிவு உடனடியாக அகற்றப்பட்டாலும், அதன் ஸ்க்ரீன் ஷாட்டுகள் இணையத்தில் தீயாய்ப் பரவி வருகின்றன.


Next Story

மேலும் செய்திகள்