யுகேஜி மாணவி பாலியல் பலாத்காரம்.. திடீரென பள்ளியில் போலீசார் குவிப்பு - பரபரப்பு சம்பவம்

x

யுகேஜி மாணவி பாலியல் பலாத்காரம்.. திடீரென பள்ளியில் போலீசார் குவிப்பு - பரபரப்பு சம்பவம்


திருவண்ணாமலை மாவட்டம் போளூரில், யுகேஜி பள்ளி மாணவியரிடம் பாலியல் பலாத்காரம் ஈடுபட்ட சம்பவம் வெளியான விவகாரத்தில், அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக, தனியார் பள்ளியில், 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அரசுப் பள்ளி தலைமை ஆசிரியரான காமராஜ், தனது மனைவி பிரபாவதி தாளாளராக பணியாற்றும் கெங்கை சூடாமணியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் படிக்கும் யுகேஜி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அந்தப் பள்ளியின் தாளாளர் பிரபாவதி மற்றும் அவரது கணவர் காமராஜ் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்