சல்லி சல்லியாக விழுந்த பள்ளி மேற்கூரை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மாணவ,மாணவிகள்

x

சல்லி சல்லியாக விழுந்த பள்ளி மேற்கூரை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மாணவ,மாணவிகள்

உடுமலை அருகே அரசு பள்ளியின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே கொம்மே கவுண்டன் புதூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர்.

காலை நேரத்தில் பள்ளி கட்டடத்தின் மேற்கூரையில் இருந்து கான்கிரீட் பெயர்ந்து விழுந்தது. பள்ளி தொடங்குவதற்கு முன்பாக, இந்த சம்பவம் நடந்ததால் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை.

பள்ளி சீரமைப்பு பணிகளை விரைவில் தொடங்க வேண்டும் என்று மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்