பிலிப்பைன்ஸில் உதயநிதி பிறந்தநாள் கொண்டாட்டம் - அயல்நாடு வரை நீண்ட பிறந்த நாள் நலத்திட்ட உதவி

x

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பிலிப்பைன்ஸ் நாட்டில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளராக நிவேதா முருகனின் மகன் நிவாஸ், பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவ படிப்பு படித்து வருகிறார். நிவாஸ் தனது நண்பர்களுடன், பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள தனியார் ஆதரவற்றோர் காப்பகத்திற்கு சென்றனர். அங்குள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு மயிலாடுதுறை மாவட்ட திமுக சார்பில் உணவு மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கினர். இதைப் பெற்றுக் கொண்ட குழந்தைகள், உதயநிதி ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து மற்றும் நன்றியை தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்