"டூவீலர் இல்ல, நம்ம டார்கெட்டே வேற" - ஸ்கெட்ச் போட்டு திருடிய நபர்... சிசிடிவியை வைத்து தட்டி தூக்கிய போலீஸ்

x

இரு சக்கர வானங்களில் உதிரி பாகங்களை திருடிய நபர்களை போலீசார் விசாரித்து வருகின்றனர். கோவை, மாணிக்கவாசகம் நகரைச் சேர்ந்தவர் சரவணன். நேற்று முன்தினம், இவர் தனது வீட்டு வாசலில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்திருந்த நிலையில், அதிலிருந்து உதிரிபாகங்கள் திருடப்பட்டது தெரிய வந்தது. பின்னர், இது குறித்து சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது, பதிவு எண் இல்லாத வாகனத்தில் வந்த இருவர் உதிரிபாகங்களை திருடியது தெரிய வந்தது. இந்நிலையில், திருடிச் சென்ற வாகனங்கள் சிவானந்த காலனி அண்ணா நகர் பகுதியில் இருப்பது கண்டறியப்பட்டு அந்நபரை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்