மின்சாரம் பாய்ந்து பலியான இருவர்.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று ஆறுதல் | Madipakkam

x

சென்னை மடிப்பாக்கத்தில், மின்சாரம் தாக்கி உயிரிழந்த இருவரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் கூறினார். மடிப்பாக்கம் ராம் நகரில், சாலையில் அறுந்து கிடந்த மின்சார கம்பியை மிதித்த லட்சுமி, ராஜேந்திரன் ஆகியோர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனர். இதனிடையே, உயிரிழந்தோரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆறுதல் கூறினார். இனிவரும் காலங்களில் இது போன்ற விபத்துக்கள் நடக்காமல் பார்த்து கொள்ளுமாறு மின்வாரிய அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்