சயனைட் கலந்த மது குடித்து இருவர் உயிரிழந்த விவகாரம்..சயனைட் எப்படி கிடைத்தது? - போலீசார் தீவிர விசாரணை

x

கீழ அலங்கம் பகுதியில் கடந்த மாதம் 21 ஆம் தேதி அரசு டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்பே அரசு மதுபான பாரில் மது குடித்து இருவர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில், தொடர்ந்து 17 நாட்களாக காவல்துறையினர் 5 தனிப்படைகள் அமைத்து பல்வேறு தரப்பினரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தஞ்சை பகுதியில் உள்ள நகை பட்டறை கடை உரிமையாளர்களிடம் 15 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து யார் சயனைடு வழங்கியது என போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனிடையே விசாரணை என்ற பெயரில்,

போலீசார் துன்புறுத்துவதாக கூறி, நகை பட்டறை தொழிலாளர்கள் 200-க்கும் மேற்பட்டோர் தங்கள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்