2 பெண்களிடம் அள்ள அள்ள வந்து கொண்டே இருந்த ரூ.51லட்சம் ரொக்கம் - சென்னை சென்ட்ரலில் பரபரப்பு

x

சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தில், உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட 51 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே போலீசார், பயணிகளின் உடைமைகளை சோதனையிட்டு கொண்டிருந்தனர். அப்போது, 2 பெண்களின் உடமைகளை சோதனை செய்ததில், உரிய ஆவணமின்றி கட்டுக்கட்டாக 51 லட்சம் ரூபாயை கொண்டு வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, பணத்தை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்