ட்விட்டர் ப்ளூ டிக் - எலான் மஸ்க்கின் அடுத்த அதிரடி

x

ட்விட்டரில் ப்ளூ டிக் சேவை பெற வேண்டும் என்றால் இனி மாதம் ஆயிரத்து 600 ரூபாய் வரை செலவிட வேண்டியிருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

ட்விட்டரை வாங்கிய கையோடு பல அதிரடி நடவடிக்கைகளை கையில் எடுத்து வரும் எலான் மஸ்க், ப்ளூ டிக் சேவைக்கான புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தவுள்ளார்.

அதன் படி, இனி ப்ளூ டிக் பெற வேண்டும் என்றால் இதற்கு முன்பு செலுத்திய 400 ரூபாயே செலவிட்ட நிலையில், அந்த கட்டண தொகையை மூன்று மடங்காக உயர்த்த திட்டமிட்டுள்ளார்,எலான் மஸ்க்.

நவம்பர் 7 ஆம் தேதிக்குள் இந்த திட்டத்தை செயல்படுத்த ஊழியர்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்