துருக்கியை போலவே இந்தியாவிலும்... மிக மோசமான நிலநடுக்கம் வரப்போகுதா? பேரதிர்ச்சி கொடுக்கும் விஞ்ஞானியின் தகவல்

x

துருக்கியில் ஏற்பட்டது போல், மிக மோசமான நிலநடுக்கம் குஜராத், பீகார் உள்ளிட்ட 8 மாநிலங்களில் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக புவியியல் ஆய்வாளர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

நெதர்லாந்து நாட்டை சேர்ந்த புவியியல் ஆராட்சியாளர் ஃப்ராங்க் கூகர்பீட்ஸ்(Frank Hoogerbeets), துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக, 3 நாட்களுக்கு முன்பே துல்லியமாக எச்சரிக்கை விடுத்திருந்தார்.

அவர் எச்சரிக்கை விடுத்த சில நாட்களில் துருக்கி, சிரியாவை நிலநடுக்கம் உலுக்கியது.

இந்நிலையில், இந்தியாவில் குஜராத், நாகாலாந்து, அஸ்ஸாம், சிக்கிம், இமாச்சலப் பிரதேசம், மணிப்பூர், ஜம்மு காஷ்மீர் மற்றும் பீகார் என 8 மாநிலங்களில் நில அதிர்வு மண்டலத்தின் கீழ் வருவதால், இப்பகுதிகளிலும் துருக்கியை போல் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானை மையமாக கொண்டு ஏற்படும் நிலநடுக்கம், பாகிஸ்தான், இந்தியா வழியாக இந்தியப் பெருங்கடலில் முடிவடையும் எனவும் கூகர் பீட்ஸ் எச்சரித்து இருப்பது இந்தியர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது..


Next Story

மேலும் செய்திகள்