சுனாமியால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள்...18 ஆண்டுகளுக்கு பிறகு...

x

நாகையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 18 ஆண்டுகளுக்கு பிறகு நிரந்தர வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. நாகையில் சுனாமியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிரந்தர சுனாமி குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. கடந்த ஆண்டுகளாக வீட்டுமனை பட்டா வழங்கப்படாமல் இருந்து வந்த நிலையில், இன்று அவை வழங்கப்பட்டன. ஆரியநாட்டுத்தெரு, அந்தணப்பேட்டை, சூர்யா நகர் கிராமங்களை சேர்ந்த 172 பயனாளிகளுக்கு 37 லட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டு மனை பட்டாக்களை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் வழங்கினார்.


Next Story

மேலும் செய்திகள்