போலீஸ் என கூறி காவல்துறையினரிடமே கஞ்சா விற்க முயற்சி - விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

x

சூலூர் அருகே தென்னம்பாளையம் பகுதியில் போலீஸ் என கூறி கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாகவும், தொலைபேசியில் அழைப்பவர்களுக்கு கஞ்சாவை டோர்டெலிவரி செய்வதாகவும் தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.


இதையடுத்து அந்த தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு தனிப்படை போலீசார் கஞ்சா வேண்டும் என தெரிவித்துள்ளனர். இதையடுத்து தென்னம்பாளையம் பகுதியில் உள்ள நான்கு ரோடு சந்திப்புக்கு வருமாறு கஞ்சா வியாபாரிகள் தெரிவித்துள்ளனர் . அங்கு காரில் வந்த 2 பேர் தனிப்படை போலீசாருக்கு கஞ்சா விற்றுள்ளனர்.

இருவரிடம் மேலும் 2 கிலோ கஞ்சா வேண்டும் என கூறி த‌னிப்படை போலீசார் அவர்களை காவல்நிலையம் அருகே அழைத்துள்ளனர்.

அங்கு காரில் சென்ற ஸ்ரீபதி மற்றும் ராஜேந்திர பிரசாத் என்ற 2 கஞ்சா வியாபாரிகளை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்


Next Story

மேலும் செய்திகள்