நம்பிய நகை கடைக்காரர்... கண்ணிமைக்கும் நேரத்தில் கம்பி நீட்டிய இளைஞர் - அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்

x

ஓசூர் அருகே, நகை வாங்குவது போல் நடித்து, ஒரு லட்சத்து 55 ஆயிரம் மதிப்புள்ள செயின்களை எடுத்துச் சென்று ஓடிய இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். தேன்கனிக்கோட்டை காந்தி சாலையில் உள்ள நகைக்கடைக்கு சென்ற இளைஞர் ஒருவர், நகை வாங்குவது போல் நடித்து, நகைகளை காட்ட சொல்லி உள்ளார். அதனை நம்பிய கடை உரிமையாளரும், நகைகளை ஒவ்வொன்றாக காட்டி கொண்டிருந்த போது, அந்த இளைஞர் திடீரென 3 தங்க செயின்களை எடுத்துக்கொண்டு ஓட்டம்பிடித்தார். இது தொடர்பான காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமிராவில் பதிவான நிலையில், நகைகளை திருடி சென்ற இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்