த்ரிஷாவின் அடுத்த அப்டேட்..Fire விடும் ரசிகர்கள்
நடிகர் தனுஷின் 50வது திரைப்படத்தில் நாயகியாக த்ரிஷா நடிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தனுஷின் 50வது திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்தில் விஷ்ணு விஷால், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில், இப்படத்தின் கதாநாயகியாக ஏற்கனவே தனுஷுடன் கொடி திரைப்படத்தில் கலக்கிய திரிஷா நடிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
