திரையில் 21 ஆண்டுகளை நிறைவு செய்யும் திரிஷா... உங்க அழகுக்கு வயசே இல்லை - ரசிகர்கள் வாழ்த்து மழை

x

திரையில் 21 ஆண்டுகளாக இளவரசியாக வளம்வரும் திரிஷாவின் திரைப்பயணம் குறித்த தொகுப்பை காணலாம்..

ஆம் அவரைப்போல் சுட்டிப்பெண் மட்டுமல்ல... என்றும் இளமையான இளவரசியும் அவரேதான்...

1999-ல் மிஸ் சென்னையாக தேர்வு செய்யப்பட்ட பிறகு, திரையுலகில் சிம்ரன் தோழியாக ஜோடி திரைப்படத்தில் அறிமுகம் ஆனார் திரிஷா. 2002-ல் மெளனம் பேசியதே படத்தின் மூலம் தனது கதாநாயகி பயணத்தை தொடங்கினார் திரிஷா...

என் அன்பே என் அன்பே.... சாங் பிரீத்... (திரிஷா வரும் காட்சிகள்)

ரஜினி, கமல், விஜய், அஜித், சிம்பு, தனுஷ் என

தமிழ் சினிமாவின் மூன்று தலைமுறை முன்னணி நடிகர்களுடனும் நடித்த சாதனைக்கு சொந்தக்காரர்...

இவர்கள் தவிர தமிழ் சினிமாவில் தங்களுக்கென தனி முத்திரை பதித்த விக்ரம், சூர்யாவுடனும் ஏராளமான படங்களில் ஜோடி சேந்தவர்....

கில்லி, சாமி, வர்ஷம் அதாடு, ஆறு, பர்ணமி, சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்க வெற்றி நாயகியானார் திரிஷா...

நடனத்திலும் துள்ளல் நாயகியாக ரசிகர்களை கிரங்கச் செய்தவர்...

விஜயுடன் திரிஷா நடித்த திரைப்படங்கள் இருவரது ரசிகர்களையும் தித்திக்க செய்தது

காதலர்களின் Ringtone-களிலும் திரிஷா நினைவுகளை தாங்கிய பாடல்கள் தனியிடம் பிடித்தது

தொடர்ந்து தமிழ், தெலுங்கு திரையுலகில் வெற்றி நாயகியாக வளம்வந்த திரிஷா, ஜெஸியாக விண்ணைத்தாண்டி வருவாயாவில் தனது உடல் மொழியில் தனி மாற்றத்துடன் ரசிகர்களை வசிகரித்தார்...

மன்மதன் அம்பு, மங்கத்தா, பாடிகார்ட் என தொடர்ந்த திரைப் பயணத்தில், 96 திரைப்படத்தில் ஜானுவாக அக்மார்க் முத்திரை பதித்தார் திரிஷா...

தனி நாயகியாகவும் பயணிக்க தொடங்கிய திரிஷா ஆக்‌ஷன் காட்சிகளிலும், கொடியில் சைலண்ட் வில்லியாகவும் கலக்கியிருந்தார்

இதில் திருப்புமுனையாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் சோழ தேசத்து இளவரசி குந்தவையாக ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துவிட்டார் திரிஷா...

கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் ஆர்வம் காட்டிய திரிஷா, லியோவில் விஜய் ஜோடியாகவும், விடாமுயற்சியில் அஜித் ஜோடியாகவும், மலையாளத்தில் மோகன் லால் ஜோடியாகவும் இன்னும் சில படங்கள் என பிசியாக இருக்கிறார். இந்த வருடம் அதிக படங்களில் நடிக்கும் கதாநாயகியும் கூட...

90 கிட்ஸ் மட்டுமல்ல... 20 கே கிட்ஸ்களையும் தனது ரசிகர் பட்டாளமாக கொண்டிருக்கிறார்...

திரையில் 21 ஆண்டுகளை நிறைவு செய்யும் திரிஷாவுக்கு, வயசானாலும் உங்க அழகும், ஸ்டைலும் மாறவில்லை என வாழ்த்துக்களை கூறி திக்குமுக்காட செய்கிறார்கள் அவரது ரசிகர்கள்...


Next Story

மேலும் செய்திகள்