Chongqing நகரத்துக்கு கொண்டாட்ட பயணம்... அழகும் பிரமாண்டமும் கொண்ட சோங்கிங்...

x

Chongqing நகரத்தை பகலைவிட நைட்ல சுத்திப்பார்க்கதான் பலருக்கும் பிடிக்குமாம்...

கண்ணை கவரும் கலர்ஃபுல் லைட்ஸ்... எப்பவும் பிஸியா இருக்க சாலைகள்... மண மணக்கும் தெருவோர கடைகள்ன்னு... இந்த ஊரோட மொத்த அழகையும் சூரிய அஸ்தமனத்துக்கு அப்புறம்தான் ரசிக்க முடியுமாம்...

அடேங்கப்பா... பாக்கும்போதே கலர் கலர்ரா கண்ணுக்கு விருந்து வைக்குதே...சரி ஏன் இன்னும் டைம் வேஸ்ட் பண்ணிகிட்டு... டக்குனு ஊருக்குள்ள இறங்கி அலப்பறைய குடுக்க ஆரம்பிக்கலாம் வாங்க...

சிட்டிக்குள்ள நுழைஞ்சதுமே எங்க போகலாம்ன்னு கன்ஃபியூஷன்ல இருந்தப்பதான்... நம்மளோட கண்ணுல தகதகன்னு டால் அடிக்குற இந்த கட்டிடம் தென்பட்டுச்சு... அட... சிட்டிக்கு நடுவுல இப்படி ஒரு அழகான கட்டிடமான்னு ஷாக் ஆகி விசாரிச்சா... இது மொதல்ல கட்டிடமே கிடையாதாம்... Hongya அப்டிங்குற பழங்கால குகைன்னு சொல்லி... மேற்கொண்டு நமக்கு ஷாக்க குடுத்துட்டாங்க இந்த ஊர் மக்கள்...

கிட்டதட்ட 2300 வருடங்கள் பழமை வாய்ந்த இந்த குகை... பார்க்க வீடுகள அடுக்கி வச்சமாதிரி இருகுறதால இத குகைன்னு சொன்னா யாரும் நம்பமாட்டாங்களாம்...

சரி அடுத்த எடுத்துக்கு போறதுக்கு முன்னாடி (18 வயசுக்கு கீழ உள்ளவங்க, இதயம் பலவீனமானவங்க, pregnant ladies... )(விஜய் சேதுபதி படகாமெடி போல் படிக்கவும்) உங்க மனச திடப்படுத்திக்கோங்க... ஏன்னா நாம இப்போ போகப்போற இடம் Fengdu ghost city...

எது பேயான்னு உடனே கதிகலங்கி... வந்தவழியா ஓடிடாதீங்கப்பா... இங்க இருக்க சிலைகள்ளாம் பார்க்க பயமா இருந்தாலும்... இந்த இடத்தோட பிலாஷ்பேக் ஸ்டோரி கேக்குறதுக்கு சுவாரஸ்யமா இருக்குமாம்..

அதாவது பல ஆண்டுகளுக்கு முன்னாடி இங்க இருந்த பேய் ஒன்னு...மனுஷங்க இறந்ததுக்கு அப்புறம்... யார் சொர்கத்துக்கு போகனும் யார் நரகத்துக்கு போகனுங்கறத... மூணு டெஸ்டு வச்சு முடிவுபண்ணுமாம்... அந்த மூணு டெஸ்டுலயும் யாரு பாஸ் ஆகுறாங்களோ அவங்களுக்கு மட்டும் பாஸ் மார்க் போட்டு சொர்கத்துக்கு அனுப்புனதா புராண கதைகள் சொல்றாங்க... ஒருவேலை பேய் உயிரோட இருக்கும்போது டீச்சரா இருந்துருக்குமோ...

சரி... சரி... பேய் கதை கேட்டு பயத்துல இங்கயே நிக்காம... Yangtze River cableway-ல்ல டிராவல் பண்ணி Dazu Rock carvingக்கு போகலாம் வாங்க...

சீனர்கள் நாலே புத்த மதத்தை சேர்ந்தவங்கன்னு நம்ம எல்லாருக்குமே தெரியும்... அதுக்கு பெஸ்டு எக்சாம்பில்தான் இந்த இடம்... 13வது சென்ஞ்சுரியில உருவான இந்த பாரையோட சிறப்பு என்னன்னா...

புத்தர்களோட வாழ்க்கை வரலாற்றை பாரை முழுக்க சிலைகளா செதுக்கி வச்சுருக்கறதுதான்.... அதுனாலதான் இங்க இருக்க பிரமிக்க வைக்குற சிலைகள பார்க்குறதுக்காக... சுற்றுல்லாவாசிகள்... கூட்டம் கூட்டமா குவியுறாங்க...

டூர் ஆரம்பத்துலயே கோவில் குளம்ன்னு சுத்திட்டு இருந்தா.... நம்ம வீட்டு குட்டீஸ்லாம் மூஞ்ச கோவமா தூக்கி வச்சுப்பாங்க.. அதுனால அவங்கள சந்தோஷப்படுத்தும் விதமா happy valley-க்கு போயி ரோலஸ் கோஸ்டர், த்ரில் ரைடு, வாட்டர் கேம்னு ஜாலி பண்ணலாம் வாங்க...

அடேங்கப்பா... ஒரு ரைடே ஊர் அளவுக்கு இவ்வளோ பெருசா இருக்கே...

ஊர்விட்டு டூர் வந்து செக்மென்ட்ல நாமலும் பல நாடுகள்ல இருக்க பலவிதமான பாலங்களை பார்த்திருப்போம்... ஆனா அடுத்து நாம போகப்போற Guangdong Qingyuan Glass Hanging Corridor அப்டிங்குற பாலம்... மரண பயத்தை நம்ம கண்ணு முன்னாடி கொண்டு வந்து நிறுத்திடும்னே சொல்லலாம்...

முழுக்க முழுக்க இந்த பாலம் கண்ணாடியால கட்டிருக்கறதால... ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும்... உயிர் போயிட்டு... போயிட்டு... வர்ரமாதிரி ஃபீலிங்கை கொடுத்துடும்... கடவுளே பாலத்தை சுத்திபார்க்குற வரைக்கும் என் உசுருக்கு நீதான்ப்பா கேரண்டி குடுக்கனும்...

கிராமம்ன்னா ஊருக்கு நடுவுல இருக்கும்... இல்ல மலைகளுக்கு மேல இருக்கும்... ஆனா சீனாவுல இருக்க ஒரு கிராமம்... மலையோட அந்தரத்துல தொங்கிட்டு இருக்கு பாருங்களேன்...

Jiangxi Wangxiangu villageன்னு அழைக்கப்படுற இந்த இடத்தோட சிறப்பம்சம் என்னன்னா... இங்கயிருக்க வீடுகள்ளாம் பார்த்தீங்கன்னா... மலைகளோட சரிவுலதான் கட்டிருக்காங்க... நூறு குடும்பங்களுக்கும் மேல வாழுற இந்த மலை கிராமத்துல வெறும் வீடுகள் மட்டுமில்லாம... மக்களுக்கு தேவையான கடைகள், மருத்துவமனைன்னு சகல வசதிகளையும் மலைகள் மேலையே கட்டிவச்சுருக்காங்க...

காடு, மலைனு ஊர் முழுக்க ரவுண்டடிச்ச நாம... சம்மர் வெயிலை சமாளிக்க Harbin Ice and Snow World-ல ஜிலு ஜிலுனு ஒரு ஆட்டத்த போட்டுட்டு வரலாம் வாங்க...

நம்ம ஊர்ல பங்குனி வெயில் பல்ல காட்டி இந்த நேரத்துல... கொட்டுற பனியில... வீடு... பேலஸ்ன்னு... தத்ரூபமா செதுக்கி வச்சிருக்கறத பார்க்கும்போது... கண்ணுக்கு... உடம்புக்கும் குளிர்ச்சியா இருக்கு...

ஹ்ம்ம்... சரி ரொம்ப நேரம் ஊரையே சுத்தி பாத்த நாம... இப்போ Chongqing நகரத்துல நடக்குற சுவாரஸ்யமான திருவிழாக்கல்ல கலந்துக்கலாம் வாங்க...

நமக்குலாம் பன் கிடைச்சா என்ன பண்ணுவோம்... ஒன்னு ஜாம் தடவி சாப்பிடுவோம்.. அட அதுவும் இல்லன்னா... காஃபில முக்கி சாப்பிடுவோம்... ஆனா இந்த ஊர்ல Cheung Chau Bun Festival - அங்குற திருவிழால தம்மதூண்டு பன்னை வச்சு சாகச வித்தையெல்லாம் காட்டுறாங்கப்பா...

அதாவது நம்ம ஊர் கோவில் திருவிழால சருக்கு மரம் ஏறுறா மாதிரி... புத்தர் பிறந்த நாள் அன்னைக்கு பன்னை அடுக்கி பெரிய கோபுரம் மாதிரி கட்டிருவாங்களாம்... அதுக்கப்புறம் திருவிழாவுல கலந்துக்குற பொதுமக்கள்... கோபுரத்து மேல ஏறி போட்டி போட்டுட்டு பன்னை திருடுறதுதான் இந்த விழாவோட ஸ்பெஷலே... கடைசில எந்த போட்டியாளர் அதிக பண் வச்சிருக்காங்களோ அவங்கள வெற்றியாளரா அறிவிச்சு நிறைய பரிசெல்லாம் குடுப்பாங்கலாம்...

அடுத்த திருவிழாவுக்கு போறதுக்கு முன்னாடி... தயசு செஞ்சு சோப்பு, ஷாம்பு, டவல்லான் எடுத்துட்டு வந்துருங்கப்பா... என்னதான் நம்ம குளிச்சு பலபலன்னு போனாலும்... Monihei Carnival முடிச்சுட்டு வரும்போது முதல்வன் அர்ஜுன் மாதிரி உடல் முழுக்க சேரோடதான் வருவோம்...

அந்த காலத்துல Monihei Carnival-ஐ கொண்டாடின மக்கள்... மனிதர்கள் ஆரோக்கியமா இருக்கறதுக்காக மூலிகைய.. பவுடராக்கி உடம்பு முழுக்க சேரு மாதிரி தடவிப்பாங்களாம்... அந்த வழக்கம் காலப்போக்குல மாறி... இப்போ மூலிகைக்கு பதிலா சேரையே உடல்ல தடவி செலப்ரேட் பண்றாங்க... இப்படி சேற்றுல குளியல்போட்டா கடவுள் நீண்ட ஆயுளை குடுக்குறதா இந்த ஊர் மக்களோட ஆழமான நம்பிக்கை...

நம்ம மூஞ்சி அடையாளம் தெரியாத அளவுக்கு சேத்துல ஆட்டம்போட்டாச்சு... அதுனால வீட்டுக்கு போயி குளிக்குறதுக்கு பதிலா... Yunnan Water Festival கலந்துட்டு... வெயிலுக்கு இதமா சில்லுனு தண்ணில ஆட்டம்போட்டுட்டு வரலாம் வாங்க...

அடடா வயசு பசங்க... பொண்ணுங்கன்னு ஒருத்தர் மேல ஒருத்தர் தண்ணீர் ஊத்தி விளையாடுறத பார்க்கும்போது... நம்மூர் திருவிழால... மாமன் மயனுங்க மொர பொண்ணுங்க மஞ்ச தண்ணி ஊத்தி விளையாடுற மாதிரியே இருக்கு...

தீபாவளி , பொங்கல் வந்தா நம்ம ஊர்ல எப்டி திருவிழாக்கள் கலைகட்டுமோ... அதுமாதிரி சீனாவுல வாழ்ந்த Qu Yuanங்குற அறிஞரோட நினைவு நாள் வந்தா Dragon boat festival-ஆ கொண்டாடுறாங்க... இந்த நாள்ல டிராகன் வடிவத்தால் ஆன போட்ல பந்தயம் வைக்குறது மட்டுமில்லாம... ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்ன்னு ஒட்டுமொத்த திருவிழாவையும் வேரலெவல்ல செலப்ரேட் பண்றாங்க...

போதும்ன்னு போதும்ன்னு சொல்ற அளவுக்கு ஒட்டுமொத்த நகரத்தையும் ஒரே நாள்ள சுத்திப்பார்த்தாச்சு... அதுனால இந்த மொமன்டை இன்னும் கொஞ்சம் ஸ்பெஷலாக்க Chongqing நகர உணவுகள ஒரு புடி புடிக்கலாம் வாங்க....

வீட்டுக்கு வந்தவங்களுக்கு வடை பாயாசத்தோட சாப்பாடு போடுறமாதிரி... நூடுல்ஸ், சூப், கறின்னு இந்த ஊர் ஸ்டைல்ல நம்மளை வரவேற்குது Chongqing Hot Pot...

சின்ன பிரீத் (மக்கள் ஒன்றா அமர்ந்து சாப்பிடுவது)

கொத்து பரோட்டா ஸ்டைல்ல பிச்சுபோட்டு சமைக்குற Bangbang Chicken-அ ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க... அப்புறம் டேஸ்ட் உங்க நாக்கவிட்டு போகவே போகாது...

மீன் குழம்பு, மீன் வறுவல்ன்னு சாப்பிட்டு சலிச்சு போனவங்களுக்கு... சுடச்சுட கிடைச்ச அற்புதமான ரெசிபிதான் Shui Zhu Yu boiled fish...

சின்ன வயசுல நம்ம எல்லாருக்கும் பிடிச்ச ஜெல்லி மாதிரி... கொழ கொழன்னு இருக்க Liangfen Mung Bean Noodlesதான் இந்த ஊர்காரங்களோட ஃபேவரைட் உணவாம்...

கண்ணுல தண்ணி வர்ர அளவுக்கு காரம் சாப்பிட்ட நம்மளோட நாக்கை சமாதானப்படுத்த... Tang Yuan ஸ்வீட்ட டேஸ்ட் பண்ணியே ஆகனும்...

பிரம்மாண்டமா இருக்கும் சீன நகரங்கள்ள... மேலும் சுவாரஸ்யங்களாள பிரம்மிக்க வைக்கும் Chongqing சிட்டிக்கு உடனே டிக்கெட் புக் பண்ணுங்க... குடும்பமா போய் குதூகலமா இருங்க...


Next Story

மேலும் செய்திகள்