#BREAKING || திருச்சியை உலுக்கிய பள்ளி மாணவி விவகாரம் - முதல் குற்றவாளிக்கு நீதிமன்ற காவல்
- மணப்பாறை பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த விவகாரம் -முதல் குற்றவாளியான வசந்தக்குமாருக்கு வரும் 21 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் - மற்றவர்களுக்கு நிபந்தனை ஜாமீன்
- திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள தனியார் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட வசந்தகுமார், மாராட்சி, சுதா, செழியன் மற்றும் ஜெயலட்சுமி ஆகிய ஐந்து பேர் திருச்சி மகளிர் நீதிமன்றம் நீதிபதி ஸ்ரீவத்சன் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி மாராட்சி, சுதா, செழியன் மற்றும் ஜெயலட்சுமி ஆகிய நான்கு பேர் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்கிற அடிப்படையில் பிணை வழங்கினார்.
- வழக்கின் முதல் குற்றவாளியான வசந்தக்குமாருக்கு வரும் 21 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டார்.
Next Story