10 வது படிக்கும் மகளுக்கு இன்ஸ்டாவில் வந்த பிறந்தநாள் வாழ்த்து... பார்த்து அதிர்ந்து போன தாய் - உயிரையே விட்ட மகள்

x
  • முசிறி அருகே தா.பேட்டை பகுதியை சேர்ந்த சுபாஷினி என்பவர், கணவரை இழந்த நிலையில், தனது 15 வயது மகளை வளர்த்து வந்துள்ளார்.
  • திருத்தலையூர் பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சிறுமி சென்று வந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
  • இந்த நிலையில், கடந்த 28ம் தேதி, சிறுமியின் பிறந்தநாளையொட்டி வாழ்த்து சொல்வதற்காக, இருவரும் ஒன்றாக சேர்ந்து எடுத்த புகைப்படத்தினை சிறுவன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
  • இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த தாய் சுபாஷினி, தனது மகளை கண்டித்துள்ளார்.
  • இதில் மனமுடைந்த சிறுமி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  • இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத இருந்த நிலையில், மாணவி உயிரிழந்தது, அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்