திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 2 ஆண்டுகளாக நடைபெறாத பட்டமளிப்பு விழா

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 2 ஆண்டுகளாக நடைபெறாத பட்டமளிப்பு விழா
Published on

கடந்த 2 ஆண்டுகளாக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெறாததால் 2 லட்சம் மாணவர்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பட்டம் வழங்கப்படாததால் மாணவர்கள் உரிய வேலைக்கு செல்ல முடியாமலும், மேற்படிப்பிற்கு வெளிநாடு செல்ல முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர். இது குறித்து பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் எவ்வித பலனும் இல்லை என கூறப்படுகிறது. தமிழக ஆளுநர் பட்டமளிப்பு விழாவிற்கு ஒப்புதல் அளிக்காததே நீளும் தாமதத்திற்கு காரணம் என்று குற்றம் சாட்டப்படுகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com