"எங்க பாட்டன் கத்து கொடுத்தது இதுதான்...பிள்ளைகளுக்கு படிப்பு கொடுக்க நினைக்கிறோம்.." - 13 ஆண்டுகளாக போராடும் பழங்குடியின மக்கள்

x
  • உரிய சான்றிதழ்கள் கிடைக்கப்பெறாததால், தங்களின் வாழ்க்கை தரம் உயராமல் இருப்பதாக, பழங்குடியின மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்...
  • திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே மோரை ஜெ.ஜெ.நகர் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
  • சாட்டை அடித்தபடி யாசகம் பெற்று பிழைப்பு நடத்திவரும் இவர்கள், சாதி சான்றிதழ் கிடைக்காததால் பிள்ளைகளை படிக்கவைக்க முடியாத சூழல் நிலவுவதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
  • ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை மட்டும் வழங்கியுள்ள அரசு, மற்ற தேவைகளையும் பூர்த்திச் செய்ய வேண்டுமென கோரிக்கை வைக்கும் பழங்குடியின மக்கள், குழந்தைகளுக்கு பிறப்பு சான்று இல்லாததால், ஆதார் அட்டை பெறமுடியாத சூழல் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
  • சாட்டை அடி தொழிலுக்கு குழந்தைகளை அழைத்து சென்றதால், கடந்த மாதம் 6 வயது சிறுமியை குழந்தைகள் நலத்துறையினர் அழைத்து சென்றதாக கூறிய அவர்கள், உரிய சான்றிதழ்கள் இல்லாததால் சிறுமியை மீட்க முடியாமல் தவித்து வருவதாக கூறினர்.

Next Story

மேலும் செய்திகள்