அத்துமீறி சிம் கார்டு விற்பனை..ஆத்திரத்தில் நடந்த பயங்கர மோதல் - முடிவில் மருத்துவமணையில்...

x

ஈரோடு சூரம்பட்டி வலசு பகுதயில், சாலையோரம் குடை அமைத்து சிம் கார்டு விற்பனை செய்யப்படுவதாக, ஈரோடு மாவட்ட செல்போன் விற்பனையாளர் சங்கத்துக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற சங்க நிர்வாகிகள், சிம் கார்டு விற்பனை செய்து குறித்து ஏர்டெல் நிறுவனத்தின் ஈரோடு மாவட்ட முகவர் ராஜா என்பவரிடம் முறையிட்டதாக தெரிகிறது. அப்போது, இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், சங்க நிர்வாகி ராஜா முஹமது என்பவர் காயமடைந்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த சூரம்பட்டி போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்