பேருந்தை இடிப்பது போல் வந்த லாரி..! பதறிய ஓட்டுநர்...பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து

x

பேருந்தை இடிப்பது போல் வந்த லாரி..! பதறிய ஓட்டுநர்...பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து - சென்னை சாலையில் பரபரப்பு

சென்னையில் பயணிகளுடன் சென்ற ஆம்னி பேருந்து கட்டுப்பாட்டை இழந்து, பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி தனியார் பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. செம்பரம்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்த போது, பேருந்தை இடிப்பது போல் லாரி ஒன்று வேகமாக வந்துள்ளது. விபத்தை தடுக்க பேருந்தை பக்கவாட்டில் ஓட்டுநர் இயக்கியுள்ளார். அப்பொழுது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. அவசரக்கால வழி திறக்காததால், பயணிகள் பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து வெளியேறினர். சாலை விரிவாக்க பணி நடைபெற்று வரும் நிலையில், இரவு நேரங்களில் தடுப்பு, உள்ளிட்ட உரிய பாதுகாப்பு வசதிகள் செய்யாததே விபத்துக்கு காரணம் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்